பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இன்றுடன் பதவி விலகுவதோடு,உள்விவகார செயலாளராக இருந்த தெரேசா மே பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்கின்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு மக்களின் ஆதரவு கிடைத்ததையடுத்து, எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் பதவி விலகுவதாக பிரதமர் டேவிட் கமரூன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அடுத்த பிரதமருக்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தெரேசா மே வெற்றியடைந்ததை அடுத்து கடந்த திங்கட்கிழமை இன்று தான் பதவி விலகபோவதாக கேமரூன் அறிவித்திருந்தார்.

இதன்படி, நேற்றையதினம் அவர் தமது இறுதி அமைச்சரவை கூட்டத்தை நடத்தியதோடு, அவருக்கு பிரியாவிடையும்  வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.