கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பைக் குணப்படுத்த இன்னும் மருந்துகள் முழுமையாக கண்டறிய படாததால், அதனை தற்காத்துக்கொள்ள உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ள வழிமுறைகளை கடைபிடிப்பதுடன், பாரம்பரிய சிகிச்சை முறையான ஆவிபிடித்தல் என்ற சிகிச்சையும் மேற்கொள்ளலாம் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

இன்றைய திகதியில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு, உயர் குருதி அழுத்த பாதிப்பு, இதயக்கோளாறு, நாட்பட்ட சிறுநீரக பாதிப்பு , நாட்பட்ட கல்லீரல் பாதிப்பு, நீரிழிவு நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தகைய வைரஸ் தொற்று அதிகளவில் பாதிக்கிறது. தங்களுடைய உடல் எடையில் உலக சுகாதார ஸ்தாபனம் நிர்ணயித்துள்ள எடையை விட 30 கிலோ அதிகமாக இருந்தால், அவர்களுக்கு உடற்பருமன் பாதிப்பு ஏற்படும். 

இத்தகைய உடற்பருமன் பாதிப்புள்ளவர்களுக்கும் கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்படுவதாகவும், அது உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய அளவில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் உடல் பருமன் கொண்டவர்களாக இருந்தால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு மற்றும் தடுப்பூசி பாரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்றும் ஆய்வுகள் உறுதிப்படுத்தி இருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கும், அதிலிருந்து குணமடைந்தவர்களுக்கும் நுரையீரலில் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டிருக்கிறது. இத்தகைய நுரையீரல் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், ஆரோக்கியமாக இயங்குவதற்கும், இத்தகைய பாதையில் உள்ள கிருமிகளை அழிக்கவும், சளி மற்றும் சுவாச கோளாறுகளை அகற்றவும், ஆவி பிடித்தல் என்ற பாரம்பரிய சிகிச்சை முறையை தற்போது மேற்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

நல்ல சூடான நீரில் ஆவி பிடிக்கும் போது நுரையீரல் மற்றும் சுவாசப் பாதையில் உள்ள கிருமிகளை, நாம் சுவாசிக்கும் ஆகி அழிக்கிறது. அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நுரையீரல் மீண்டும் தன்னை புதுப்பித்துக் கொண்டு இயங்குவதற்கும் இவை தூண்டுதலாக இருக்கின்றன. அதே தருணத்தில் நாம் ஆவி பிடிக்கும் பொழுது சிறிதளவு மஞ்சளுடன் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் வேப்பிலை ,துளசி ,இஞ்சி, எலுமிச்சை ,மிளகு ....போன்றவற்றையும் சிறிதளவு சேர்த்து கொண்டால் ஆரோக்கியம் மேம்படும் இத்தகைய ஆவிபிடித்தல் 5 முதல் 10 நிமிடம் வரை நீடிக்கலாம் என்றும் , அதன்பிறகு மருத்துவர் கூறிய நடைமுறையுடன் முகத்தையும், கை கால்களையும் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இத்தகைய பாரம்பரிய மருத்துவ நடைமுறை எந்த பக்க விளைவையும் ஏற்படுத்துவதில்லை என்பதும் ,இருமல், சளித் தொல்லை போன்ற அறிகுறிகள் ஏற்பட்டவுடன் இதனை வாரத்திற்கு ஒருமுறையாவது கடைப்பிடித்தால் முழுமையான நிவாரணம் கிடைக்கும் என்கிறார்கள்.

டொக்டர் ஸ்ரீதேவி.

தொகுப்பு அனுஷா.