(செய்திப்பிரிவு)

இகிணியாகல, அம்பாறை - பிபில வீதியில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாமல் ஓயா ஆற்றிற்கு அருகில் அம்பாறை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி ஆற்றின் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் இகிணியாகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை - பரகஹகெலே பகுதியைச் சேர்ந்த 53 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.