ஹெரோயின்  பயன்படுத்திய குற்றச்சாட்டில் நால்வர் கைது

Published By: Digital Desk 4

27 Aug, 2020 | 12:06 PM
image

தோட்டத்திற்கு இறைக்கும் மோட்டார் கிடங்குக்குள் வைத்து ஹெரோயின்  போதைப்பொருள் நுகர்ந்தனர் என்ற குற்றச்சாட்டில் நான்கு பேர் கோப்பாய் பொலிசாரால்  கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 160 மில்லிக்கிராம்  ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் உரும்பிராய் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.இந்த  சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் செல்வபுரம் பகுதியில், தோட்டத்திற்கு இறைக்கும் மோட்டார் கிடங்குக்குள் இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி  போதைப்பொருள் பாவிப்பதாக கோப்பாய் பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிசார் மேற்கொண்ட  சுற்றிவளைப்பு தேடுதலின் போது ஹெரோயின் போதைப்பொருள் நுகர்ந்து கொண்டிருந்த  சந்தேகத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட  சந்தேக நபர்களிடம் இருந்து 160 மில்லிக்கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்துவதர்காக  நடவடிக்கையை கோப்பாய் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெப்பச் சுட்டெண் உயர்வு: 6 மாவட்டங்களுக்கு...

2026-07-12 07:03:38
news-image

மத்துகமவில் ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச்...

2026-07-12 05:14:05
news-image

நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து...

2026-07-11 18:53:09
news-image

ஜூனில் வெளிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல் வருவாய்...

2026-07-11 18:52:32
news-image

தேசிய பாதுகாப்பு மிக உயர்ந்த மட்டத்தில்...

2026-07-11 18:44:37
news-image

அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்கிறது:...

2026-07-11 18:06:59
news-image

மத்தள விமான நிலையத்தில் முதலீடு செய்ய...

2026-07-11 18:06:42
news-image

காலாவதியான மின்னஞ்சல் கட்டமைப்பைப் பயன்படுத்திய திறைசேரி...

2026-07-11 18:00:43
news-image

சந்தை சக்திகளுக்கு ஏற்ற செயற்கை நுண்ணறிவின்...

2026-07-11 18:00:19
news-image

உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்நாட்டுப் பொருளாதாரச்...

2026-07-11 15:38:57
news-image

டெங்கு நோயாளர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்க ஐ.டி.எச்...

2026-07-11 18:34:14
news-image

நீதி அமைச்சரை பதவி நீக்காமல் நீர்கொழும்பு...

2026-07-11 15:38:21