பல்லாயிரக்கணக்கானோர் உடலில் நீல வர்ணத்தைப் பூசிக் கொண்டு 3000 பேர் ஒன்றுகூடிய கண்காட்சியொன்று இங்கிலாந்தின் ஹல் சிற்றி நகரில் நடை பெற்றுள்ளது.

கலைப்படைப்புக்காக இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பென்ஸர் டுனிக்கின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் சுமார் 3000 தொண்டர்கள் உடலில் நீல வர்ணத்தைப் பூசிக் கொண்டு திரண்டிருந்தனர்.

ஸ்பென்ஸர் டுனிக், உலகின் பல்வேறு நகரங்களிலுள்ள பிரசித்தி பெற்ற இடங்களில் நிர்வாண கோலத்திலுள்ள நூற்றுக்கணக்கானோரை ஒன்றுதிரட்டி புகைப்படங்களை பிடிப்பதில் பெயர் பெற்றவர்.

பிரிட்டனில் நடைபெற்ற இத்தகைய மிகப் பெரிய கண்காட்சி இதுவெனக் கூறப்படுகிறது.