‘டார்லிங்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் காட்டில் தற்போது அடைமழை பொழிந்து வருகிறது. நடிகராக அறிமுகமான 2 வருடங்களில் 4 படங்கள் அவரது நடிப்பில் வெளியாகி விட்டன.

தற்போது ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘புரூஸ்லீ’ படங்களில் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ் அடுத்ததாக 2 புதிய படங்களில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில், ஸ்ரீகிரீன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் 4 வது படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். இது இவரது 8 வது படமாகும். சண்முகம் முத்துசாமி இயக்குனராக அறிமுகம் ஆகும். இந்த படத்தில் ஜி.வி.பிரகாசுடன் சத்யராஜ் இணைகிறார். இவர்களுடன் தம்பிராமையா,ரோபோசங்கர், ஆர்.ஜே.விஜய் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். பிகே வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். நாயகி தேர்வு நடந்து வருகிறது.