(இராஜதுரை ஹஷான்)
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட நான்கு மாத காலத்திற்கான இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான இரு நாள் பாராளுமன்ற விவாதம் நாளையும், நாளை மறுதினமும் இடம் பெறவுள்ளது. எதிர்வரும் 28ம் திகதி இடைக்கால கணக்கறிக்கையை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்றது.
2021ம் ஆண்டுக்கான புதிய வரவு- செலவு திட்டம் உருவாக்கப்படவுள்ளமையினால் மூன்றாம் காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கையினை உருவாக்க அமைச்சரவை கன்னி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கை கடந்த ஒருவார காலமாக முன்னெடுக்கப்பட்ட்து. இதற்கமைய எதிர்வரும் நான்கு மாத காலத்திற்கு தேவையான இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
மூன்றாம் காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கையின் முழு செலவினம் 1747.68பில்லியன் நிதியாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அரசசேவைகள் மற்றும் , மாகாண சபைகள், உள்ளுராட்சி மன்ற அமைச்சுக்கு 194.38 பில்லியன் நிதி ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனைய அமைசசுக்களை காட்டிலும் அரச சேவைகள் அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக பாதுகாப்பு அமைச்சுக்கு 174.09 பில்லியன் நிதி பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உள்ளுர் மற்றும் சர்வதேச மட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ள அரமுறை கடன்களை செலுத்த 778.39 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இடைக்கால கணக்கறிக்கைக்கு ஒதுக்கியுள்ள நிதியை திரட்டிக் கொள்ள 1300 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ள இடைக்கால கணக்கறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான இருநாள் விவாதம் இன்றும் , நாளையும் இடம் பெறும்.
எதிர்வரும் 28ம் திகதி இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்ற வாக்கெடுக்கிற்கு உட்படுத்தப்பட்டோ அல்லது வாக்கெடுப்பு இன்றியோ நிறைவேற்றிக் கொள்ளப்படும் என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM