ஹெரோயினுடன் தம்பதியினர் கைது

26 Aug, 2020 | 05:24 PM
image

(செய்திப்பிரிவு)

பிலியந்தல - சூவாரபொல பகுதியிலுள்ள சந்தேகத்திற்கிடமான வீடொன்றை சோதனைக்கு உட்படுத்திய போது ஹெரோயின் போதைப்பொருளுடன் தம்பதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சுற்றிவளைப்பானது மொரட்டுமுல்ல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய செவ்வாய்க்கிழமை பிற்பகல் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த வீட்டிலிருந்து 75 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மொரட்டுமுல்ல பகுதியைச் சேர்ந்த 39 மற்றும் 43 வயதான கணவனும் மனைவியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

சந்தேக நபர்கள் மொரட்டுமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் வாடகைக்கு வசித்து வந்ததாகவும் வீட்டில் இரகசியமாக ஹெரோயின் போதைப்பொருள் விற்பணையில் ஈடுபட்டு வந்ததாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்படும் தேசிய...

2025-01-16 20:01:43
news-image

பாதாள உலக செயற்பாடுகளை ஒழித்து துப்பாக்கிச்...

2025-01-16 20:02:50
news-image

4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த...

2025-01-16 18:58:21
news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54
news-image

ஜனவரி மாதத்தை தமிழ் மொழி, பாரம்பரிய...

2025-01-16 17:09:37
news-image

சிறீதரன் எம்.பி முடிந்தால் ஸ்டாலினுடன் பேசி...

2025-01-16 17:01:14
news-image

இலங்கையில் தமிழர்களுக்கு பொறுப்புக்கூறல் நீதியை உறுதிசெய்வதற்கான...

2025-01-16 17:13:43
news-image

ஜனாதிபதி பீஜிங்கில் சீன மக்கள் வீரர்களின்...

2025-01-16 17:31:50
news-image

"வளமான நாடு - அழகான வாழ்க்கை"...

2025-01-16 17:26:50
news-image

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு...

2025-01-16 17:22:49