மனைவிக்கு தெரியாமல் தன்னுடைய இரகசிய காதலியின் வீட்டில் பால் காய்ச்ச சென்ற குடும்பஸ்தர் மீது தீப்பற்றியதில் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் மன்னர் பகுதியைச் சேர்ந்த 30 வயது குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மன்னார் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை, முள்ளியவளை பகுதியில் பெண் ஒருவரை இரகசியமாக காதலித்து வந்துள்ளார்.
குறித்த காதலியின் வீட்டில் கடந்த 21ஆம் திகதி பால் காய்ச்ச சென்றுள்ளார். அவருடைய காதலியும் குறித்த குடும்பஸ்தரும் பால் காய்ச்சிக் கொண்டிருக்கும்போது அடுப்புக்கு மேலிருந்து மண்ணெண்ணெய் போத்தல் தவறி விழுந்ததில் இருவரும் தீக்காயத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
உடனடியாக இருவரும் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் குறித்த குடும்பஸ்தர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். இந்த இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற் கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM