கொரோனா தொற்று காலத்தில் இந்திய மாணவர்களை தேசியத் தேர்வுகளை எழுதக் கூறுவது நியாயமற்றது என்று சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள்  கிரெட்டா துன்பெர்க் மற்றும் வனேசா நகதேவும் தமது டுவிட்டர்பக்கதில் பதிவிட்டு இந்திய மாணவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து கிரெட்டா துன்பெர்க் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“கொரோனா தொற்றுநோய் காலத்திலும், லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் இந்திய மாணவர்களைத் தேர்வு எழுதக் கூறுவது நியாயமற்றது. ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வுகளை ஒத்திவைக்கும் அழைப்புக்குத் துணை நிற்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் இதுவரை 31 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியும், 58 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியும் உள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் பரீட்சைகளை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வுகளை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நடத்த முடிவெடுத்து திகதிகளையும் அறிவித்துள்ளது. 

இம்முடிவுக்கு இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன். சமூக ஆர்வலர்களும், பிரபலங்களும் #PostponeJEE_NEETinCOVID எனும் ஹேஸ் டெக் மூலம் தமது எதிர்ப்பிணை தெரிவித்துவருகின்றமை  குறிப்பித்தக்கது.