தொலைபேசி இலக்கங்களை மாற்றாமல் தங்களுக்கு பிடித்த தொலைபேசி சேவை வழங்குநர்களை மாற்றமுடியும் என இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தொலைபேசி எண் பெயர்வுத்திறனை செயல்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) ஆரம்பித்துள்ளது.

குறித்த அமைப்பை செயல்படுத்திய பின்னர், மக்கள் தங்கள் தற்போதைய தொலைபேசி எண்ணை மாற்றாமல் தங்கள் விருப்பத்தின் சிறந்த சேவை வழங்குநரைத் தேர்வு செய்யலாம் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.

"தொலைபேசி எண் பெயர்வுத்திறன் என்பது ஒரு நெட்வொர்க் செயல்பாடாகும், இது மொபைல் சந்தாதாரரை, சேவை வழங்குநரை மாற்ற அனுமதிக்கிறது, அதே நேரத்தில் அவர்களின் தற்போதைய தொலைபேசி எண்ணைத் தக்க வைத்துக் கொள்ளும்," எனவும் தெரிவித்துள்ளார்.