இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் 'இந்திய - இலங்கை நட்புறவு' என்ற தொனிப்பொருளிலான இலச்சினை வடிவமைப்பு  போட்டி ஒன்றுக்கான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இப்போட்டிக்கான தலைப்பு 'இந்திய - இலங்கை நட்புறவு' என்பதாகும். இந்த போட்டியில் பங்குபற்ற விரும்புபவர்கள் வயது எல்லை 2020 ஆகஸ்ட் 01 ஆம் திகதி அன்று 18 வயதுக்கு குறைவானவர்களாக இருக்க வேண்டும்.

தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்களம் என மும்மொழிகளிலும் உள்ளவர்கள் பங்குபற்ற முடியும் என்பதோடு இப்போட்டிக்காக பதிவு கட்டணம் எதுவும் அறவிடப்பட மாட்டாது.

பங்குபற்றுபவர்கள் தமது ஆக்கங்களை பாடசாலை, கல்லூரி,  பல்கலைக்கழக அடையாள அட்டை அல்லது தேசிய அடையாள அட்டை பிரதியுடன் 2020 செப்டெம்பர் 20 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ கிடைக்கும் வகையில் competition.svcc@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

வெற்றிபெற்றவர்களுக்கான முதலாம் பரிசு 20,000 ரூபா , இரண்டாம் பரிசு  15,000 ரூபா, மூன்றாம் பரிசு,000 ரூபாவாகும். மேலதிக விபரங்களுக்கு சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் 011-2684698 என்ற தொலைபேசி இலக்கத்தில் அல்லது iccrcolombo2@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ள முடியும்.