4 மாதங்களின் பின் ஹொங்கொங்கில் கொரோனா தொற்றுக்குள்ளானவருக்கு மீண்டும் கொரோனா

25 Aug, 2020 | 03:33 PM
image

ஹொங்கொங்கை சேர்ந்த இளைஞருக்கு கொரோனாவில் இருந்து குணமடைந்து 4 மாதங்கள் கழித்து மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த நபரிடம் ஹொங்கொங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய மருத்துவ சோதனையில், கொரோனா வைரஸ் சற்று மாறுபட்ட வடிவில் தொற்றை ஏற்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று வந்து குணமடைந்தவர்களுக்கு வாழ்நாள் நோய் எதிர்ப்புத் திறன் உருவாகாது என்பதை இது காட்டுவதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொற்று வந்து போனவர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம் என்பதுடன், அவர்களும் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.

எந்த அறிகுறியும் இல்லாமல் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றுக்கு ஆளான நபருக்கு ஹொங்கொங் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

கொரோனா தொற்றுக்குள்ளான ஒரு நோயாளியை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளுக்கு செல்லக்கூடாது என்பது முக்கியம் என்று உலக சுகாதார ஸ்தாபனம்  எச்சரிக்கிறது.

உலகெங்கிலும் 23 மில்லியனுக்கும் அதிகமானனோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறார்கள், ஏனெனில் அவர்களின் உடல்கள் வைரஸை எதிர்த்துப் போராடுகின்றன, இது திரும்பி வருவதிலிருந்து அவர்களைப் பாதுகாக்க உதவுகிறது.

மிகவும் நோய்வாய்ப்பட்ட நோயாளிகளில் வலுவான நோயெதிர்ப்பு சக்தி கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பாதுகாப்பு அல்லது நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு வலிமையானது என்பதும்  எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

மேலும் அறிய, முன்னர் கொரோனா வைரஸைக் கொண்டிருந்த நபர்கள் தொடர்பாக காலப்போக்கில் ஆய்வுகள் தேவை என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்ட பின்னர் நாளை...

2024-09-17 11:43:12
news-image

டிரம்ப் கொலை முயற்சி - 12...

2024-09-17 10:40:52
news-image

நைஜீரியாவில் வெள்ளம் : சிறைச்சாலை சுவர்...

2024-09-17 11:03:16
news-image

புதுடெல்லிமுதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று ராஜினாமா:...

2024-09-17 10:12:24
news-image

ரஷ்ய ராணுவத்தினரால் அடிமைகள் போல் நடத்தப்பட்டோம்:...

2024-09-16 14:56:05
news-image

சீனாவின் ஷங்காயை தாக்கிய சூறாவளி ;...

2024-09-16 13:48:23
news-image

டிரம்பை கொலை செய்ய முயற்சித்தவர் உக்ரைன்...

2024-09-16 11:47:32
news-image

உத்தரபிரதேசத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து...

2024-09-16 09:30:51
news-image

டிரம்பை கொல்வதற்கு மீண்டும் முயற்சி-சந்தேக நபர்...

2024-09-16 07:11:47
news-image

நைஜீரியாவில் படகு விபத்து - 64...

2024-09-15 12:49:20
news-image

அந்தமான், நிக்கோபார் தீவுகளின் தலைநகரின் பெயரில்...

2024-09-14 13:32:32
news-image

முதன் முதலில் ஆபிரிக்காவில் குரங்கம்மை தடுப்பூசியை...

2024-09-14 12:19:04