ஹெப்பற்றிக்கொல்லாவை பகுதியில் யானை தாக்குதலிற்குள்ளாகி படுகாயமடைந்த ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்

அனுராதபுரம் ஹெப்பற்றிகொல்லாவை பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவரை அப்பகுதிக்கு வந்த காட்டுயானை தாக்கியுள்ளது. 

இதனால் படுகாயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு பதவியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைகளிற்காக நேற்று வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார்.

சம்பவத்தில் அப்துல் வகீட் என்ற 40 வயதுடைய நபரே படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.