பெய்ரூட் துறைமுகத்தில் ஆபத்தான இரசாயனங்கள் கொண்ட 79 கொள்கலன்களை லெபனான் இராணுவ வல்லுநர்களும் அவர்களது பிரான்ஸ் சகாக்களும் கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆகஸ்ட் 14 முதல் 22 வரையிலான காலகட்டத்தில், ஹைட்ரோகுளோரிக் அமிலம் கொண்ட 25 கொள்கலன்களும், ஏனைய இரசாயனங்கள் அடங்கிய 54 கொள்கலன்களும் கண்டுபிடிக்கப்பட்டன. 

அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட கொள்கலன்களின் பேரழிவு தரக்கூடும் என்று லெபனான் இராணுவம் திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பெய்ரூட் துறைமுகத்தில் 2,750 டொன் வெடிக்கும் அம்மோனியம் நைட்ரேட் (2014 இல் சுங்க சேவைகளால் பறிமுதல் செய்யப்பட்டது) முறையற்ற முறையில் சேமிக்கப்பட்டதால் ஏற்பட்ட பாரிய குண்டுவெடிப்பு, பரவலான அழிவைக் கொண்டு வந்து.

இதனால் 170 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 40,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சில சமீபத்திய ஊடக அறிக்கைகள் வெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 220 ஆக உள்ளதாக கூறியுள்ளதுடன், 100 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

லெபனான் அரசாங்கம் தலைநகரில் அவசரகால நிலையை அறிவித்து பெய்ரூட் குண்டுவெடிப்புக்கு ஒரு வாரத்திற்குள் பிரதமர் ஹசன் டயப் இராஜினாமா செய்தார்.