கொரோனா தொற்றினால் தென்கொரியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் சிக்கியிருந்த 296 இலங்கையர்கள் இன்று காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அதன்படி இன்சீயோனிலிருந்து கொரியா ஏயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான கே.இ - 9473 என்ற விமானத்தினூடாக 275 இலங்கையர்கள் இன்று அதிகாலை 8.30 மணிக்கு பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்களில் பெரும்பாலோர் வேலைவாய்ப்புக்காக தென் கொரியா சென்றிருந்த இலங்கையர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கட்டார் ஏயர்வேஸ் விமானம் சேவைக்கு சொந்தமான கியூஆர் -6600 விமானம் டோஹாவிலிருந்து இன்று அதிகாலை 1.20 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

நாட்டை வந்தடைந்த அனைத்து பயணிகளிடமும் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.