இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள மகாட் என்ற இடத்தில் அமைந்துள்ள 5 மாடி கட்டிடத்தின் 3 தளங்கள் இன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் இதுவரை ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 60 க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

3 தேசிய பேர்டர் மேலாண்மை குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை முன்னெடுத்துள்ளன. மீட்பு பணிகள் தொடரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
