இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2020 ஆகஸ்ட் 19ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினையும் அதன் தற்போதைய மட்டங்களான முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதங்களில் பேணுவதென தீர்மானித்தது.

இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைத் தளர்த்தல் வழிமுறைகளினை சந்தைக் கடன் வழங்கல் வீதங்கள் இன்னமும் முழுமையாகப் பிரதிபலிக்கவில்லையாகையால் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினை தொடரவேண்டிய அவசியத்தினை சபை அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ளது.
மிக அதிகமாகவிருப்பதாகக் கருதப்படுகின்ற குறிப்பிட்ட சில வட்டி வீதங்களைக் குறைப்பதற்கு இலக்கிடப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு சபை தீர்மானித்திருக்கிறது.
இது, சிறியளவிலான கடன்பாட்டாளர்களுக்கு உதவும். குறைக்கப்பட்ட பணவீக்க நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, சபையானது ஒட்டுமொத்த சந்தைக் கடன் வழங்கல் வீதங்கள் மேலும் குறைவடையுமெனவும் அதன் மூலம் உற்பத்தியாக்க பொருளாதார நடவடிக்கைகளுக்கான கடன்பாடுகளை
ஊக்குவிக்கப்படுமெனவும் கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும் அதேபோன்று பரந்த பொருளாதாரத்திற்கும் வலுப்படுத்தப்பட்ட ஆதரவினை வழங்குமெனவும் எதிர்பார்க்கிறது.
கொவிட்-19 தொற்று விரைவாகப் பரவி வருவதற்கு மத்தியில் உலகளாவிய நாணயத் தளர்த்தல் தொடர்கிறது கொவிட்-19 தொற்றின் விரைவான பரவல் மற்றும் அதனுடன் தொடர்பான கட்டுப்படுத்தும் வழிமுறைகள் என்பன ஆண்டின் முதலரைப்பகுதியில் உலகளாவிய பொருளாதாரத்தில் கணிசமான சரிவினை ஏற்படுத்தியிருக்கின்றன.
இதற்குப் பதிலிறுத்துகின்ற விதத்தில் பெரும்பாலும் முன்னேற்றம் கண்ட
பொருளாதாரத்தினதும் அதேபோன்று தோற்றம்பெற்றுவரும் சந்தைகள் மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களினதும் அனைத்து மத்திய வங்கிகளும் பொருளாதார நடவடிக்கைகளின் மீட்சிக்கு ஆதரவளிக்கும் விதத்தில் தொடர்பான அரசாங்கங்களின் இறைத் தூண்டல்களுடன் சேர்த்து நாணயத் தளர்த்தல் வழிமுறைகளை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
கொவிட்-19 தொற்றினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் 2020இன் பின்னரைப்பகுதியில் மீட்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றன
தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தற்காலிக மதிப்பீடுகளின்படி, 2020இன் முதற்காலாண்டூப் பகுதியில் இலங்கையின் பொருளாதாரம் 1.6 சதவீதத்தினால் சுருக்கமடைந்துள்ளது.
இது மத்திய வங்கியின் எதிர்பார்ப்புக்களுக்கு மாறானதாகவுள்ளது. கிடைக்கத்தக்க குறிகாட்டிகளின்படி 2020இன் இரண்டாம் காலாண்டுப்பகுதியில் பொருளாதார நடவடிக்கைகளின் மீதான கொவிட்-19 இன் மோசமான தாக்கம் கணிசமானதாகவிருக்கும் போல் தோன்றுகின்றது. எனினும், மேம்பட்ட அரசியல் உறுதிப்பாடு, வியாபார நம்பிக்கைகளில் காணப்பட்ட மேம்பட்ட பெறுபேறுகள் மற்றும் நாணய, இறைத் தூண்டல்களின் காலம்கடந்த தாக்கம் என்பனவற்றின் ஆதரவுடன் பொருளாதார நடவடிக்கைகள் குறிப்பாக 2020இன் நான்காம். காலாண்டுப்பகுதியில் விரைந்து முன்னேற்றமடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
நான்காம் காலாண்டில் எதிர்பார்க்கப்படுகின்ற இவ்வுத்வேகம் இவ்வாண்டுப்பகுதியில் நாடூ நேர்க்கணியமானதொரு வளர்ச்சியைப் பதிவுசெய்வதற்கு மிக இன்றியமையாததாகும். இறக்குமதிகளுக்குப் பதிலீடான உள்நாட்டூ உற்பத்திகள் மற்றும் ஏற்றுமதிகளைத் தூண்டுதல் மீது அதிகரித்தளவில் கவனம்செலுத்தப்படுவது
குறுங்கால வளர்ச்சியை உந்துவதுடன் நீண்டகாலத்தில் கணிசமான தாக்கங்களுக்கான சாத்தியத்தையும் கொண்டூள்ளது. எதிர்பார்க்கப்படுவதும் நீண்டகாலத்தில் கணிசமான தாக்கங்களை ஏற்படுத்தும் சாத்தியம்
காணப்படுகிறது. குறுங்காலத்திற்கு அப்பால் நீடித்து நிலைத்திருக்கும் வளர்ச்சி உத்வேகத்தை பேணுவதற்கு பொருளாதாரத்தில் காணப்படும் அமைப்பியல் பிரச்சனைகளைக் தாப்பதற்கான சீரதிருத்தங்களைத் தேவைப்படுத்தும்.
முன்கூட்டி எடுக்கப்பட்ட வழிமுறைகளின் ஆதரவுடன் வெளிநாட்டுத் துறை மேம்பட்டிருக்கிறது வெளிநாட்டுத் துறை தொடர்ந்தும் தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மையினை எடுத்துக்காட்டி கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் நடைமுறைப்படுத்தப்பட்ட முன்மதியுடைய வழிமுறைகளின் தாக்கத்தினைப்
பிரதிபலிக்கின்றது. இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மற்றும் குறைவடைந்த உலகளாவிய பெற்றோலிய விலைகள் என்பனவற்றின் ஆதரவுடன் ஏற்றுமதிகளின் சுருக்கத்தினைவிட இருக்குமதிகளின் சுருக்கம் விஞ்சிக்காணப்பட்டமையின் காரணமாக 2020இன் முதலரைப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறை குறுக்கமடைந்துள்ளது.
2020 மாச்சிலிருந்து அவதானிக்கப்பட்ட வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கிற்கு மாறாக யூனில் தொழிலாளர் பணவனுப்பல்களில் ஓரளவு முன்னேற்றம் அவதானிக்கப்பட்டது. எனினும், கொவிட் தொற்றின். காரணமாக தொடர்ந்தும் இயங்குவதற்கு உண்ணாட்டூ சுற்றுலாவின் மீது தங்கியிருக்கும் சுற்றுலாத் துறை 2020இல் வெளிநாட்டுச் செலாவணி வருவாய்களில் கணிசமான வீழ்ச்சியொன்றிற்கு முகங்கொடுக்கும். 2020 மாச்சு-ஏப்பிறல் காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட கணிசமான பெறுமானத்
தேய்வினைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்க டொலருக்கெதிரான இலங்கை ரூபாவின் தேய்வு ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 1.3 சதவீதத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. சந்தைகளிலிருந்தான வெளிநாட்டுச் செலாவணி கொள்வனவுகள் மற்றும் இந்திய ஒதுக்கு வங்கி மற்றும் உரிமம்பெற்ற
வங்கிகளுடனான பரஸ்பர பரிமாற்றம் மூலமான வெளிநாட்டு நாணயங்கள் என்பனவற்றினூடாக மத்திய வங்கி அதன் ஒதுக்கினை பேணக்கூடியதாகவிருந்ததுடன் 2020 யூலை இறுதியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 7.1 பில்லியனாக மதிப்பிடப்பட்டூள்ளது. அது, 4.7 மாத இறுக்குமதிகளை உள்ளடக்கக்கூடியதாகவும் இருந்தது.
எதிர்வுகூறும் காலப்பகுதியில் கேள்வியினால் தூண்டப்படும் பணவீக்க அழுத்தங்கள்
எதிர்பார்க்கப்படவில்லை கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட முதன்மை மற்றும் மையப் பணவீக்கம் 2020 யூலையில் சிறிதளவால் விரைவடைந்த போதும் ஒப்பீட்டு ரீதியில் இன்னமும் குறைவான
மட்டங்களிலேயே காணப்படூகின்றது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமும் மையப் பணவீக்கமும் 2020 யூனில் விரைவடைந்து உணவுப் பணவீக்கத்தின் தாக்கத்தினை முக்கியமாகப் பிரதிபலித்தது. அத்தகைய குறுங்காலத் தளம்பல்களுக்கு
மத்தியிலும் பொருத்தமான கொள்கை வழிமுறைகளின் காரணமாக பணவீக்கம் அண்மிய காலத்திலிருந்து நடுத்தரகாலம் வரையான பகுதியில் விரும்பத்தக்க 4-6 சதவீத வீச்சில் தொடர்ந்தும் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
முதன்மைப் பணவீக்க (கொ.நு.வி. சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்டது) எறிவுகள்: பணவீக்கம் அண்மிய காலத்தில் குறைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் காணப்படுமென எறிவுசெய்யப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியைத் தாண்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகளின் தாக்கமும் வழமை நிலைமைக்குத் திரும்புகின்ற உலகளாவிய எண்ணெய் விலைகளும் 2022இன் நடுப்பகுதியளவில் பணவீக்கத்தின் மீது ஒரளவு மேல்நோக்கிய அழுத்தங்களைத் தோற்றுவிக்கக்கூடும்.