ஈராக் தலைநகர் பாக்தாத்தின் வடபகுதியில் உள்ள ரஷிதியா மாவட்டத்தில் இன்று கார் குண்டு வெடித்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்று கொள்ளவில்லை. எனினும், இந்த தாக்குதல் நடந்திருக்கும் விதத்தை வைத்து பார்க்கையில் இது .எஸ். தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்குமென நம்பப்படுவதாக ஈராக் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த 3 ஆம் திகதி கர்ராடா மாவட்டத்தில் .எஸ். தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதல்களில் 292 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.