இந்திய இழுவைப்படகு அச்சுறுத்தல் தொடர்பில் விரைவில் தீர்வு எட்டப்படும் - டக்ளஸ் தேவானந்தா

Published By: Digital Desk 3

24 Aug, 2020 | 05:09 PM
image

இந்திய இழுவைப்படகு அச்சுறுத்தல் தொடர்பில் விரைவில் தீர்வு எட்டப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (24.08.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்புாது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்க பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிளிநொச்சி இரணைதீவு உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் இந்திய இழுவைப்படகுகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும், இந்த அரசின் காலத்தில் மீண்டும் இவ்வாறான பிரச்சினை எழுந்துள்ளதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த பிரச்சினைக்கு துறைசார்ந்த அமைச்சர் என்ற வகையில் தீர்வை பெற்றுக்கொடுப்பீர்களா என அவரிடம் ஊடகவியாளல் வினவினார்.

குறித்த விடயம் தொடர்பில் இதுவரை எனக்க யாரும் தெரிவிக்கவில்லை. இவ்விடயம் தொடர்பில் எனக்க தெரியாது. ஆனாலும் இந்திய இழுவைப்படகு பிரச்சினை என்பது இரணைதீவிற்கு மாத்திரமல்ல வடக்க மாகாணத்திற்கே பெரும் சவாலாக காணப்படுகின்றது. இந்த நிலையில் இந்திய அரசுடன் தொடர்ந்தும் பேச்சுக்களை முன்னெடுத்து வருகின்றோம். வடக்கில் அச்சுறுத்தலாக காணப்படும் இந்திய இழுவைப்படகினை எல்லை பகுதிக்குள் அனுமதிக்காதவாறு தடுப்பதற்கான உறுதிப்பாட்டினை அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் விரைவில் இரணைதீவு பகுதிக்கு செல்வோம். அப்போது குறித்த விடயம் தொடர்பில் விரிவாக கவனம் செலுத்துவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இரணைதீவு மக்கள் தமது பூர்வீக இடங்களில் கட்டுமான பணிகளை முன்னெடுப்பதற்கு கடற்படையினர் தடுத்து வருவதாகவும், தங்கி நின்று மீன்பிடியில் ஈடுபட மாத்திரமே அனுமதிக்கப்படுள்ளதாகவும் பிரதேச மக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் என்ற வகையிலும், அமைச்சர் என்ற வகையிலும் அவர்களின் பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வை பெற்றுக்கொடுக்க உள்ளீர்கள் என இதன்போது ஊடகவியலாளர் வினவினார்.

பதிலளித்த அமைச்சர், இரணைதீவு மக்களின் மீள்குடியேற்றத்திற்கு அப்புாது எதிர்கட்சியில் இருந்தாலும் எனது பங்கும் இருந்தது. இவ்வாறான நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் எனக்கு இதுவரை யாரும் தகவல் தரவில்லை. அவர்களின் வாழ்வாதாரம் சார்ந்த முக்கிய விடயங்களில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். கடலட்டை வளர்ப்பு பண்ணைகளை அமைத்து கொடுத்துள்ளோம். மேலும் பல தொழில்சார் வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். ஆனாலும் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் எமது கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை. அடுத்துவரும் வாரத்தில் அப்பகுதிக்கு செல்ல உள்ளோம். இதன்போது இந்திய இழுவைப்படகு, மற்றும் அவர்களின் தொழில் மற்றும் குடியிருப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13