பட்டதாரிகள் மீண்டும் ஆர்ப்பாட்டம்..!

Published By: J.G.Stephan

24 Aug, 2020 | 05:06 PM
image

(எம்.மனோசித்ரா)
வேலையற்ற பட்டதாரிகளுக்கு 50, 000 அரச வேலைவாய்ப்புக்களை வழங்கும் வேலைத்திட்டத்தில் தமது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் இன்று திங்கட்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் அங்கிருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு பேரணியாகச் சென்றனர். இதன் போது சிலருக்கு மாத்திரம் ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தென்னே ஞானாநந்த தேரர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ,

ஊழியர் சேமலாப நிதியில் அங்கத்தும் பெற்றிருந்த மற்றும் தொழிலில் ஈடுபட்டிருந்த விண்ணப்பதாரிகளுக்கு மேன்முறையீட்டை சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் தொழிலை இழந்துள்ள பட்டதாரிகளுக்கு துரிதமாக வேலை வாய்ப்பினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்று குறிப்பிட்டார்.

தொழில் அற்ற பட்டதாரிகள் அல்லது டிப்ளோமாதாரிகளை தொழிலில் ஈடுபடுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் உரிய தகுதிகள் இருப்பினும் தாம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பலராரும் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மேன்முறையீட்டை சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு உரிய தகுதிகளைப் பெறுவார்களாயின் பயிற்சிக்கு அழைப்பதற்கு எதிர்பாரப்பதாக அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைவாக இவ்வாறான விண்ணப்பதார்களுக்கு அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.pubad.gov.lk  இல் வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாக விண்ணப்பங்களை செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53
news-image

எவ்வகையில் கணக்கெடுப்பினை முன்னெடுத்தாலும் சரியான தரவுகளைப்...

2025-03-15 01:58:07
news-image

தோட்டப்புற வீடுகளுக்கு மின்இணைப்பை பெறுவதற்கான முறைமையை...

2025-03-14 16:32:13