அங்கஜனுக்கு அமைச்சுப்பதவி கொடுத்திருக்க வேண்டும் - விமல் வீரவன்ச

Published By: Digital Desk 3

24 Aug, 2020 | 04:20 PM
image

(ஆர்.யசி)

சம்பந்தனையும், விக்கினேஸ்வரனையும் தாண்டி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளதானது தமிழ் மக்கள் பிரிவினைவாத கொள்கையில் இருந்து விடுபட்டு தேசிய அரசியலில் காலடி எடுத்து வைக்க ஆரம்பித்துவிட்டனர் என்பது தெட்டத்தெளிவாக வெளிப்படுத்துகின்றது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அங்கஜனுக்கு அமைச்சுப்பதவி கொடுத்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார்.

நிகழ்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

சம்பந்தனை விடவும் மோசமான விதத்தில் தமிழ் தேசிய உரிமையாளராக மாற வேண்டும் என்பதே விக்கினேஸ்வரனின் நோக்கமாக உள்ளது. ஏனென்றால் விக்கினேஸ்வரனுக்கு வடக்கு கிழக்கு பூமியில் தேசியம் பேச எந்த உரிமையும் இல்லை, அவர் கொழும்பு  7 இல் பிறந்து வளர்ந்து கல்விகற்றவர். அவரது இரு பிள்ளைகளையும் சிங்களவர்களுக்கு திருமணம் முடித்துக்கொடுத்துள்ளார். தமிழ் மொழி மூத்த மொழி, தமிழே தனது மூச்சி, தமிழே அவரது பேச்சு என பாராளுமன்றத்தில் கூறுவது உண்மையென்றால் என்ன நோக்கத்தில் தனது பிள்ளைகளை சிங்களவர்களுக்கு திருமணம் முடித்துக்கொடுத்தார்.

அவர்களின் உடலில் இல்லாத இனவாதத்தை வேண்டுமென்றே உருவாக்கி விக்கினேஸ்வரன் இனவாத கருத்துக்களை முன்வைக்கின்றார். இவ்வாறு பேசி தமிழ் மக்களை குழப்பிவிட்டால் தான் சம்பந்தனை மிஞ்சிய வீரராக முடியும் என விக்கினேஸ்வரன் நினைக்கின்றார். இன்று வடக்கில் தமிழ் மக்கள் தமிழ் இனவாதத்தை நிராகரிக்கின்றனர். 16 பேராக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலம் இன்று 10 ஆக குறைந்துவிட்டது. முதல் தடவையாக வடக்கில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். எனவே தமிழ் மக்கள் இன்று இனவாதத்தில் இருந்து விடுபட்டு இலங்கையர்கள் என்ற அடையாளத்தில் தமிழ் மக்கள் செயற்பட ஆரம்பித்துவிட்டனர். பெரும்பாலான தமிழர்கள் அரசாங்கத்தை ஆதரிக்க ஆரம்பித்து விட்டனர்.

என்னை பொறுத்தவரையில் யாழ்ப்பணத்தில்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டிய அங்கஜனுக்கும் அமைச்சு பதவி கொடுக்க வேண்டும், கிழக்கில் இருந்து தெரிவாகிய அதாவுல்லாவுக்கும் அமைச்சுப்பதவி கொடுக்க வேண்டும். அப்போது தான் தமிழ்பேசும்  மக்கள் மனங்களை வெற்றிகொண்டு இலங்கையர்கள் என்ற இணைந்த பயணத்தை முன்னெடுக்க முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

2025-11-08 10:33:10
news-image

யாழில் பெண் தலைவர்களை வலுப்படுத்துவது தொடர்பில்...

2025-11-08 10:22:56
news-image

இன்றைய தங்க விலை நிலைவரம் !

2025-11-08 11:29:02
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2025-11-08 10:20:33
news-image

விபத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு!

2025-11-08 09:49:31
news-image

பெருமளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது

2025-11-08 09:49:12
news-image

இருவேறு வீதி விபத்துக்களில் இருவர் பலி!

2025-11-08 09:37:30
news-image

காலி - ஜாகொட்டுவெல்ல கடற்கரையில் அடையாளம்...

2025-11-08 08:56:17
news-image

துங்கல்பிட்டியவில் சட்டவிரோத பீடி இலைகள் மற்றும்...

2025-11-08 08:55:50
news-image

நீர்கொழும்பு ஏத்துகல கடல் நீரோட்டத்தில் சிக்கியவர்...

2025-11-08 08:47:45
news-image

கெப்பட்டிபொல பகுதியில் வீடொன்றில் மின்சாரம் தாக்கி...

2025-11-08 08:45:42
news-image

இன்றைய வானிலை

2025-11-08 06:05:57