வாள்வெட்டு குழுக்களை இல்லாமல் செய்து பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்குங்கள் படுகொலை செய்யப்பட்ட மாணவனின் பிரேதத்தை வீதியில் வைத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் மட்டக்களப்பு கொம்மாதுரை பகுதியில் வைத்து இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாள் வெட்டு சம்பவத்தில் 15 வயது மாணவன் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் மாணவனின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது.
இதன் போது செங்கலடி கொழும்பு மற்றும் பதுளை வீதிகளை மறித்து இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இந்த வாள் வெட்டு குழுக்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுடிகளிடம் இருக்கும் வாள்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்ற கோசங்களை முன்வைத்து கதறி அழுதனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
செங்கலடி பாடசாலையொன்றில் பத்தாம் ஆண்டில் கல்வி கற்கும், செங்கலடியை சேர்ந்த மாணவனுக்கு, அதே பாடசாலையில் கற்கும் கொம்மாதுறையை சேர்ந்த மாணவன் தாக்கியதால் காயமடைந்த நிலையில் செங்கலடியை சேர்ந்த மாணவன், வீடு சென்று நடந்த விடயத்தை கூறியதும்,
காயமடைந்த மாணவனின் உறவினர்கள் இருவர் அந்த மாணவனை அழைத்துக் கொண்டு இரவு (22/08) 08.30 மணியளவில் கொம்மாதுறைக்கு சென்று, ஏன் ? இவனை தாக்கினீர்கள் என விடயத்தை கேட்டுக்கொண்டிருந்த போது ஏற்ட்ட கருத்து முறன்பாட்டினால் கொம்மாதுறையை சேர்ந்த சம்பந்தப்பட்டவர்களால், இவர்கள் தாக்கப்பட்டு, வாள் வெட்டுக்கும் உள்ளாகியுள்ளனர்.

பாரிய வாள் வெட்டுக்குள்ளான செங்கலடியை சேர்ந்த மாணவன் ரமணன் திவ்வியநாதன் (14) சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
இம் மாணவனின் உறவினர்களான சசிகுமார் மற்றும் பிரேமநாதன் ஆகிய இருவரும் பாரிய வெட்டுக்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
சம்பவத்தை அறிந்த ஏறாவூர் குற்றத்தடுப்பு பொலிஸார் சம்பவ இடத்துக்கு நேரடியாக சென்று விசாரனைகளை மேற்கொண்டு, மாணவனின் சடலத்தை ஏறாவூர் ஆதார வைத்தியசாலையிலும், காயங்களுக்குள்ளானவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதித்துள்ளனர்.
கொலைக்கு காரணமானவர்கள் தப்பிச்சென்றுள்ள போதும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட நவீன ரக வாள், ஏறாவூர் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.
மேலதிக விசாரனைகளை ஏறாவூர் குற்றத்தடுப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு ஏறாவூர் செங்கலடி ஐயன்கேணி கொம்மாதுரை பகுதிகளில் வாள் வெட்டு கலாசாரம் மிக மோசமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளது.
இளைஞர்கள் பாடசாலை மாணவர்கள் மத்தியில் சில ரவுடிகளினால் மிகவும் திட்டமிட்டு உருவாக்கப்படும் இந்த வாள் வெட்டு குழுக்களுக்கு பொலிசார் மறைமுக ஆதரவை வழங்கி வருகின்றனர்.
கடந்த காலங்களில் வாள் வெட்டு குழுக்களால் பல கடத்தல் கொள்ளை கொலை சமூக சீரழிவுகள் பல நடைபெற்றும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யாது பொலிசார் அவர்களுடன் மறைமுக ஆதரவை வைத்து வாள் வெட்டு குழுக்களை ஊக்குவித்தே வந்தனர்.

மட்டக்களப்பு ஏறாவூர் செங்கலடி கணபதிப்பிள்ளை கிராமம் ஐயன்கேணி கொம்மாதுரை போன்ற பகுதிகளில் குறித்த வாள் வெட்டு குழுக்களின் தலைவர்கள் மறைமுகமாக இருந்து இளைஞர்களை ஒருங்கிணைத்து கடத்தல் கொள்ளை கொலை கப்பம் பேறும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த குழுக்களிடம் சட்டவிரோத ஆயுதங்கள் கை எரி குண்டுகள் வாள்கள் என்பன உண்டு.
ஆனால் இவர்களை கைது செய்ய பொலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் தற்போது இந்த வாள் வெட்டு கலாசாரம் பாடசாலை மாணவர்கள் வரை சென்றுவிட்டது.
பாடசாலையில் மாணவர்கள் மத்தியில் நடக்கும் மிக சாதாரண வாய் தர்க்கம் இந்த வாள் வெட்டு கலாச்சாரத்தால் ஒரு மாணவணை கொலை செய்யும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM