(செய்திப்பிரிவு)

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹபுத்கமுவ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நுகேகொட குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போது கேரளா கஞ்சா மற்றும் மாவா போதைப்பொருளுடன்  சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து 1 கிலோ 950 கிராம் கேரளா கஞ்சா மற்றும் 1 கிலோ 840 கிராம் மாவா போதைப்பொருள் ஆகியன கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

அங்கொட பகுதியைச் சேர்ந்த 44 வயது மதிக்கத்தக்க நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் நுகேகொட குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.