கிண்ணியா பூவரசன்தீவு கிராமத்தில் நேற்று(23) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்  ஏழு வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

கிண்ணியா பூவரசன்தீவு கிராமத்தில் வழமைபோன்று மாலை வேளையில் சகநண்பர்களுடன் நிஜாம் அஸ்னி (வயது-7) எனும் குறித்த சிறுவன் விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது அங்கே அமைந்துள்ள பாவனையில் இல்லாத கிணற்றில் அவன் தவறுதலாக விழுந்ததில் இம்மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆழமான அந்த கிணறு  மக்கள் பாவனையின்மையினால் அசுத்தமடைந்த  நிலையில் இருந்துள்ள நிலையில் இக்கிணற்றின் பாதுகாப்புச் சுவர் மிகவும் தாழ்ந்த நிலையில் அமையப்பெற்றிருந்தது.

குறித்த சிறுவன் கிண்ணியா பூவரசன்தீவு யூசுப் வித்தியாலயத்தில் தரம்-2 இல் கல்வி பயின்று வந்தவர். இவரின் தாய் ஒரு ஆசிரியை என்பதும் தந்தை  வியாபாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு இரண்டு மகன்கள்  ஒருவர் தரம் 9 கல்வி பயின்று வருகின்றார்.

இந்நிலையில் உயிரிழந்த குறித்த சிறுவனின் உடல் கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையினை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.