கல்கிஸை கடலில் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி காணாமல்போன இரு இளைஞர்களை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

18 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்களும் நேற்று மாலை 4.30 மணியளவில் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

மொத்தமாக ஏழு பேர் நீராடச் சென்ற காணாமல்போன நிலையில், அவர்களில் 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 

இந் நிலையிலேயே காணாமல்போன ஏனைய இருவரையும் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இவ்வாறு காணாமல்போன இரு இளைஞர்களும் பூண்டுலோயா பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.