கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடி சீரடைய இரண்டு ஆண்டுகள் ஆகுமென்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருக்கிறது.

உலகம் முழுவதும் 22 மில்லியன் மக்களைப் பாதித்து, ஏறக்குறைய எட்டு லட்சம் மக்களை உயிர் பலி வாங்கி, உலகையே கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக உலகம் முழுவதும் சுகாதார துறை ரீதியாக மட்டும் அல்லாமல் பொருளாதார ரீதியாகவும் கடும் நெருக்கடிகள் உருவாகியுள்ளது. இதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்த பொது முடக்க கட்டுப்பாடுகள் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்திருக்கிறது.

இந்நிலையில் இது தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் பேசுகையில்,'1918ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஸ்பானிஷ் காய்ச்சல் சரியாக இரண்டு ஆண்டுகளானது. தற்போதைய வளர்ச்சியடைந்த தொழில்நுட்ப உதவியுடன் கொரோனா வைரஸ் தொற்றையும் எதிர்த்து வெற்றி அடைய முடியும். இருப்பினும் கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடி நிலை சீரடைய இரண்டு ஆண்டுகள் ஆகலாம்.' என்றார்.

இதன் காரணமாக குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்த வழிகாட்டு பாதுகாப்பு நடைமுறைகளை இரண்டு ஆண்டுகள் வரை பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

-டொக்டர் ஸ்ரீதேவி