வெவ்வேறு வீதி விபத்துக்களில் சிறுவன் உள்ளிட்ட மூவர் பலி!

Published By: Jayanthy

23 Aug, 2020 | 06:09 PM
image

நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிறுவனொருவன் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அஹூங்கல்ல, மொரகஹஹேன, வெயங்கொடை ஆகிய பிரதேசங்களிலேயே இவ் விபத்துக்கள் பதிவாகியுள்ளன. 

அஹூங்கல்ல

அஹூங்கல்ல - வெலிக்கந்த பகுதியில் சனிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற விபத்தில் சிறுவனொருவன் பரிதாபகரமாக உயிரிழந்ததாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

வெலிக்கந்த - அஹூங்கல்ல பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவனே குறித்த விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

அஹூங்கல்ல - வெலிக்கந்த பகுதி வீடொன்றிற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றை 15 வயது சிறுவனொருவன் செலுத்த முற்பட்டுள்ளார். இதன்போது குறித்த லொறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீட்டின் முன்னுள்ள குடியிருப்பு பகுதியில் சைக்கிள் ஓடிக்கொண்டிருந்த மற்றுமொரு சிறுவனின் மேல் லொறி மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த சிறுவன் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. 

மொரகஹஹேன

மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரணை - கலகெதற பீ - 123 வீதி, மில்லேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து  சனிக்கிழிமை மாலை இடம்பெற்றுள்ளது.

ஹொரணை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளொன்று எதிர்த்திசையில் வந்த கனரக வாகனமொன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் காயமடைந்த மோட்டார்  சைக்கிள் ஓட்டுனர் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நுவரெலியாவை சேர்ந்த 32 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

விபத்து தொடர்பில் கனரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வெயங்கொடை

வெயங்கொடை பொலிஸ் பிரிவின் நயிவல - உடுகம்பொல வீதியில் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

நயிவல நோக்கி பயணித்த லொறியொன்று துவிச்சக்கர வண்டியொன்றுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வீகொட - பெம்முல்ல பகுதியைச் சேர்ந்த 78 வயதான நபரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார். 

விபத்துக்குக் காரணமான லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல கடற்பகுதிகளுக்கு 'சிவப்பு' மட்ட எச்சரிக்கை!

2026-08-08 11:22:51
news-image

மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவது...

2026-08-08 11:24:38
news-image

பிரகீத் எக்னெலிகொட வழக்கு: விசேட மூவர்...

2026-08-08 10:56:46
news-image

பரவிபாஞ்சான் பாலத்தை புனரமைக்குமாறு கோரி மக்கள்...

2026-08-08 10:53:50
news-image

யாழில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாவிகளை இலக்காக...

2026-08-08 10:39:40
news-image

சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைந்த...

2026-08-08 10:34:00
news-image

புளியங்குளம் பகுதியில் வாகன விபத்து: இளைஞர்...

2026-08-08 09:57:10
news-image

நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை:...

2026-08-08 09:54:46
news-image

இந்தியா–இலங்கை ஆடை வர்த்தக மாநாடு!

2026-08-08 09:47:56
news-image

மெகசின் சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதி...

2026-08-08 09:19:59
news-image

வத்தளை பிறந்தநாள் விழா துப்பாக்கிச்சூடு: துப்பாக்கிதாரி...

2026-08-08 09:17:29
news-image

இன்றைய வானிலை 

2026-08-08 06:16:04