2020 ஐ.பி.எல் தொடரின் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடும் லசித் மலிங்க பங்கெடுக்க மாட்டார் என்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் அணியுடன் அவர் செல்ல மாட்டார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.

மலிங்கவின் தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையேற்படலாம். இதன்போது, தான் தந்தையுடன் இருக்க விரும்புவதாக மலிங்க தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் போட்டிகளில் மலிங்க 170 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த ஆண்டு கிண்ணத்தை வெல்வதில் மலிங்க முக்கிய பங்காற்றியிருந்தார்.