செப்டெம்பர் இறுதிக்குள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறக்க எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெற்ற பின்னரே இந்த முடிவு செயல்படுத்தப்படும். குடிமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கைக்கு வருகை தர ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் தற்காலிகமாக 2020 மார்ச் முதல் மூடப்பட்டன.

இதன் விளைவாக இலங்கையில் சிக்கித் தவித்த அனைத்து சுற்றுலாப் பயணிகளையும் திருப்பி அனுப்ப அரசாங்கம் உதவியதுடன், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் அனைத்து இலங்கையர்களையும் திருப்பி அனுப்ப ஒரு சிறப்புத் திட்டத்தையும் ஆரம்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.