வற்வரிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் விமல் வீரவன்ச, நாமல் ராஜபக்ஷவின் கைதை அரசியல் பழிவாங்கல் என்று சொல்ல முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். 

அத்துடன் வற் வரிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து விமல்வீரவன்ச நல்லாட்சி அரசாங்கத்துக்கு நன்றி செலுத்த வேண்டும். கடந்த காலங்களில் நீதிமன்ற தீர்ப்புகள் அலரிமாளிகையில் இருந்தே தெரிவிக்கப்பட்டன எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.