மூக்கடைப்பை குணப்படுத்தும் பொலிபெக்டமி

Published By: Robert

12 Jul, 2016 | 02:39 PM
image

கோடைக்காலம், வசந்த காலம், பனி காலம், மழைக்காலம் என்றில்லாமல் எல்லா காலங்களிலும், எல்லா வயதினருக்கும் ஒவ்வாமை மற்றும் ஜலதோஷம் போன்ற காரணங்களால் மூக்கடைப்பு ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு அவர்கள் பணியாற்றும் குளிர்சாதன வசதிப் பொருத்தப்பட்ட அறை கூட மூக்கடைப்பிற்கு காரணமாக இருக்கிறது. சாதாரண மூக்கடைப்பு என்றால் ஒரு சிலருக்கு உடனடியாகவும், ஒரு சிலருக்கு ஒரு சில தினங்களுக்கு பிறகும் குணமாகிவிடும். அப்படி குணமாகவில்லையென்றால் அவர்கள் உடனடியாக மருத்துவர்களை சந்திக்கவேண்டும். 

மூக்கடைப்பிற்கு பொலிப் என்கிற சதையின் வளர்ச்சியும் ஒரு காரணமாகிறது. இந்த சதை வளர்ச்சியை ஃபீல்ட்கிரேப்ஸ் என்று குறிப்பிடுவதுமுண்டு.மூக்கு, சவ்வு மினிக்கஸ் மெம்பரேன் போன்ற பகுதிகளில் ஒவ்வாமை காரணமாகவோ அல்லது காளான் பூஞ்சைக் கிருமிகளாலோ இந்த சதை வளர்கிறது. இவை வளர வளர சைனஸ் அறைகளை அடைக்கிறது. அதனால் சைனஸில் சளி தங்கி, சைனஸ் பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இதனையடுத்தே பொலிப் சதை வளாச்சி உருவாகிறது. இந்த பொலிப் சதை வளர்ச்சி ஒரு புறமும், மற்றொரு புறம் சைனஸ் தொல்லையும் இணையும் போது தொல்லைத் தொடங்குகிறது. பேச்சு பாதிக்கப்படுகிறது. ஒரு சிலர் பேசிக்கொண்டேயிருக்கும போது திடிரென்று பேச்சு தடைப்படும் அல்லது குரல் கம்மும். ஒரு சிலர் மூக்கடைத்தப்படி பேசுவார்கள். வாயால் சுவாசிக்க நேரிடும். வாசனை திரவியங்கள் மற்றும் சுவையுணர்வதிலும் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு சிலருக்கு இதன் தொடர்ச்சியாக அஸ்துமா கூட வரக்கூடும்.

இத்தகைய தருணங்களில் மூக்கிலிருந்து வளாந்திருக்கும் பொலிப் சதையை முற்றிலுமாக அகற்றுவது ஒன்றே சிறந்த வழி. இதற்கு பொலிபெக்டமி என்று மருத்துவத் துறையினர் குறிப்பிடுவர். இவ்வகையான சத்திர சிகிச்சையின் போது, இதன் வேர்கள் எங்கிருக்கிறது என்பதை கண்டறிந்து, எண்டாஸ்கோப்பி மூலம் அடியோடு களைந்தால் தான் தொல்லை தீரும். மேலும் ஒரு சிலருக்கு ஓஸ்பர்ஜில்லஸ் என்ற காளான்களால் ஒரு வகையான பொலிப் சதை வளரும். இதை தொடக்க நிலையில்யே கண்டறிந்து குணப்படுத்தாவிட்டால், மூளை வரை ஊடுருவி மரணத்தை கூட ஏற்படுத்திவிடக்கூடும். அதனால் இதனை அனுபவமிக்க சத்திர சிகிச்சை நிபுணர்களைக் கொண்டு பாதுகாப்பாக அகற்றிவிடவேண்டும்.

டொக்டர் M  ரவி ராமலிங்கம் M.S.,

தொகுப்பு  அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29