(தி.சோபிதன்)

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்த மணிவண்ணன் தனது அரசியல் நிலைப்பாடு தொடர்பில் ஊடக சந்திப்பு நடத்த சென்றபோது அவரையும் அவரது ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து வலுகட்டாயமாக வெளியேற்றிய சம்பவம் இன்று இடம்பெற்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராகவும் ஊடகப் பேச்சாளராகவும் இருந்த மணிவண்ணன் அண்மையில்  அந்த பதவியில் இருந்து கட்சியால் நீக்கப்பட்டார். இதனால் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது.

இவ்வாறான நிலையில் தனது அரசியல் நிலைப்பாடு தொடர்பில் இன்று யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக மணிவண்ணனின் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்துக்கு வந்திருந்த போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மணிவண்ணனின் ஆதரவாளர்களை வெளியேற்றியதுடன் கட்சி அலுவலகத்தையும்  மூடிவிட்டு சென்றனர். 

இதனால் மணிவண்ணனின் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தவுடன் வீதியில் என்ன செய்வதென்று அறியாது நின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான நிலமை காணப்பட்டது.