இறுதி யுத்தத்தில் இனப்படுகொலை இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் உள்ளது : குற்றங்களை மறைக்கவோ, சர்வதேச பொறுப்புக்களை கைவிடவோ முடியாது - சபையில் கஜேந்திரகுமார்

21 Aug, 2020 | 08:10 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஜனாதிபதி நாட்டின் இறையாண்மை குறித்து பேசுகின்றார், ஆனால் இலங்கையின் இறுதி யுத்தத்தில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளது. அவ்வாறு இருக்கையில்  இறையாண்மையை முதன்மைப்படுத்தி போர் குற்றங்களை மறைக்கவோ சர்வதேச பொறுப்புக்களை கைவிடவோ முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான முழுநாள் விவாதம் இன்று சபையில் இடம்பெற்ற வேளையில் விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையில் "மக்கள் தமக்கு வழங்கிய மக்கள் ஆணையை நாம் நன்றாக விளங்கிக்கொண்டுள்ளோம், எக்காரணம் கொண்டும் அதனை நாம் மீரா மாட்டோம்" என ஜனாதிபதி  தெரிவித்திருந்தார். 

இந்த கொள்கை தனது கட்சிக்கு மாத்திரம் போருந்துமாக இருந்தாலும் வடக்கு கிழக்கிற்கு அது பொருந்தாது என்பதை அவர் கூறியுள்ளாரா என கேள்வி எழுகின்றது. வடக்கு கிழக்கு மக்கள் ஏகமனதான தீர்மானம் ஒன்றினை வழங்கியுள்ளனர். 

தமிழ் பிரதிநிதித்துவமும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதே அதுவாகும். தமிழர் உரிமை என்பது அவர்களது அடையாளம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இலங்கை என்பது தேசிய நாடு. இங்கு இரு  தேசிய இனங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இவ்விரு இனங்களின் உரிமைகள் சமமானது. அரசியல் அமைப்பு ரீதியில் இந்த உரிமைகள் உறுதிப்படுத்தப்படுகின்றது.

இந்த ஆட்சியில் உள்ள தமிழ் தலைமைகள் தமது தேர்தல் கொள்கையில் "தமிழர் தேசம் தலைநிமிர" என பிரசாரம் செய்துள்ளனர். அப்படியென்றால் தமிழர் தேசம் பலமடைய வேண்டும் என்ற ஏகமனதான நிலைப்பாடு வடக்கு கிழக்கு மக்களால் விரும்பப்பட்டுள்ளது.

அந்த ஏகமனதான தீர்மானம் நிராகரிக்கப்பட முடியாது. தமிழ் மக்களுக்கு இந்த உரிமைகளை தடைகளின்றி வழங்கப்பட வேண்டும். அதேபோல் ஜனாதிபதி இறையாண்மை குறித்தும் பேசியுள்ளார். இந்த நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார். அது சரியானதே, ஆனால் அந்த இறையாண்மை நிச்சயமாக சமரசத்திற்கு உற்படுதப்பட வேண்டும். 

இந்த நாட்டில் யுத்தமொன்று இடம்பெற்றது. இந்த யுத்தத்தில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக ஒட்டுமொத்த உலகமுமே கூறுகின்றது. சர்வதேச மட்டத்தில் உள்ளடக்கிய பிரதான விடயங்களை அரசாங்கம் பாதுகாக்க தவறிவிட்டது. போற்குற்றதில் இன்றைய பிரதான கட்சியே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

யுத்தத்தில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளது. எனவே இறையாண்மையை முதன்மைப்படுத்தி இந்திய விடயங்களை மறைக்கவோ சர்வதேச பொறுப்புக்களை கைவிடவே முடியாது. மிக மோசமான போர் குற்றங்களை எக்காரணம் கொண்டும் மறைக்க முடியாது.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்தில் பல நல்ல விடயங்கள் உள்ளது, வேறுநாட்டு மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவது தடுக்கப்படுவது, காணி இல்லாதவர்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறும் விடயங்கள் அனைத்துமே முக்கியமானதான விடயமாகும். 

அதேபோல் வடக்கு கிழக்கு பூமி கடந்த முப்பது ஆண்டுகள் யுத்தத்திற்கு முகங்கொடுதுள்ளது என்பதை ஜனாதிபதி மறந்துவிடக்கூடாது. இந்த முப்பது ஆண்டுகால யுத்தத்தினால் வடக்கு கிழக்கு மக்கள் முப்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளனர். 

அவர்களை சமமாக நடத்த வேண்டும், அவர்களை நிராகரிக்க முடியாது. அவர்களின் பொருளாதாரத்தை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

இலங்கையின் இறுதி யுத்தத்தில் போர்குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் பொய் கூறுகின்றார் என ஆளும் தரப்பு கூறியது.

இந்த நாட்டில் மிக மோசமான போர் குற்றங்கள் இடம்பெற்றதாகவும், இன்று  கோத்தாபய ராஜபக் ஷ அரசாங்கம் இறையாண்மையை கூறி இந்த உண்மைகளை மூடி மறைக்க முடியாது என இன்று சபையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியிருந்த நிலையில் அதற்கு பதில் தெரிவிக்கும் போது இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர கூறுகையில், இந்த நாட்டில் எந்தவித போர் குற்றங்களும் இடம்பெறவில்லை. கஜேந்திரகுமார் இந்தஸ் சபையை தவறாக வழிநடத்துகின்றார். பொய்களை கூறி ஏமாற்றுகின்றார் என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-06-19 06:18:12
news-image

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் : வீதியில்...

2024-06-19 03:27:32
news-image

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்த்...

2024-06-19 02:29:31
news-image

அதிக வருமானம் ஈட்டுவோருக்கே வாடகை வரி ...

2024-06-19 02:26:15
news-image

தெரிவுக்குழு அமைப்பதில் உடன்பாடு இல்லை; எதிர்க்கட்சித்...

2024-06-19 02:18:38
news-image

கடல் நீரில் மூழ்கிய இளைஞன்; ஆபத்தான...

2024-06-19 02:13:43
news-image

வரிப் பணத்தை முறையாக அறவிட்டால் புதிய...

2024-06-18 15:21:30
news-image

ஒரு நாள் இரவு காட்டில் வாழ்ந்த...

2024-06-19 01:28:05
news-image

உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுத்துறை விமர்சிப்பது...

2024-06-18 15:08:11
news-image

களுபோவில வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையில் மனித பாவனைக்குதவாத...

2024-06-18 21:41:13
news-image

இலங்கை வரவுள்ள சீன இராணுவ மருத்துவக்...

2024-06-18 14:47:35
news-image

கோட்டாவின் பாவத்தை ரணில் தூய்மைப்படுத்துகிறார் -...

2024-06-18 17:27:30