சுதந்திரக் கட்சியின் சார்பில் உள்ளுராட்சி மன்ற தேர்தலிலில் போட்டியிடவிருக்கும்  வேட்பாளர்களுக்கான நேர்முகத் தேர்வு  இன்று காலையில் இருந்து கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை  சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 10 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் குறித்த நேர்முகத் தேர்வு நிறைவடையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.