நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ வீட்டில் இருந்து உணவு கொண்டு வருவதற்கு  சிறைச்சாலை ஆணையாளரிடத்தில் அனுமதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, நேற்றிரவு சிறைச்சாலையில் வழங்கப்பட்ட உணவை நாமல் உட்கொள்ளவில்லை என சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   

இவர் கொழும்பு மெகசீன் சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பு வழங்கப்படும் சில கைதிகளுடன் ஈ வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிதி மோசடி விசாரணைப் பிரினால் நேற்று கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.