பாம்பின் வாயில் சிக்கிய பிள்ளையை காப்பாற்றிய வீர எலி(வீடியோ இணைப்பு)

Published By: Raam

12 Jul, 2016 | 12:52 PM
image

பாம்பின் வாயில் சிக்கி இரையாகவிருந்த தனது குட்டி எலியை அந்தப் பாம்புடன் போரிட்டு தாய் எலி காப்பாற்றிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

இத்தாலியின் நேப்பிஸ் நகர வீதியில் மேய்ந்து கொண்டிருந்த குட்டி எலியை ஒரு பாம்பு தனது வாயில் கவ்விக்கொண்டு வேகமாக சென்றது. இதை கவனித்துவிட்ட தாய் எலி, பாம்பை துரத்திச் சென்று அதன் வாலை சரமாரியாக கடித்து குதறியது.

எலியின் கடியை தாங்க முடியாத பாம்பு, குட்டி எலியை கீழே போட்டுவிட்டு அருகில் உள்ள புதரை நோக்கி ஓடியது, அதன்பிறகும் தாய் எலியின் ஆவேசம் தணியவில்லை, புதருக்குள் புகுந்த பாம்பை தொடர்ந்து விரட்டிச் சென்றது.

சில நிமிடங்களுக்கு பிறகு பாம்பை வீழ்த்திய பெருமிதத்துடன் தாய் எலி, குட்டி எலியை நோக்கி ஓடிவந்தது. 

அதுவரை அசைவின்றி கிடந்த குட்டி எலி தனது தாயை கண்டவுடன் துள்ளிக்குதித்து செல்கிறது. குறித்த வீடியோ இதுவரை 21 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை கவர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right