காட்டு யானைகளால் அல்லலுறும் வவுனியா மக்கள் -தீர்வின்றி தொடரும் பிரச்சனை

Published By: Digital Desk 4

21 Aug, 2020 | 11:17 AM
image

வவுனியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் மற்றும் தோட்ட செய்கையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்.  

குறிப்பாக செட்டிகுளம், நீலியாமோட்டை, கனகராயன்குளம், புளியங்குளம், நெடுங்கேணி, காஞ்சூரமோட்டை, மெனிக்பாம் போன்ற பகுதிகளில் யானைகளின் தாக்குதல் மிகவும் அதிகரித்த நிலையில் உள்ளது. இதனால் விவசாய, தோட்ட செய்கையாளர்கள்  வெகுவாக பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.   

ஒவ்வொரு இரவும் வரும் யானைக்கூட்டங்கள், பயன்தரும் பயிர்களை நாசம் செய்வதுடன், இருப்பிடங்களையும் சேதப்படுத்தும் நிலமை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

குறித்த யானைகளின் தொல்லைகளிற்கு நிரந்தர தீர்வு காணுமாறு பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மாவட்டத்தின் பிரதான வீதிகளில் பகல் நேரங்களில் வந்துநிற்கும் யானைகளால் பயணிகளும் அசௌகரியங்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.  

குறிப்பாக புளியங்குளம் - நெடுங்கேணி பிரதான வீதி, மதவாச்சி- மன்னார்வீதி, பூவசரங்குளம்- செட்டிகுளம் வீதிகளில் மாலை வேளைகளில் யானைகள் வந்து நிற்கின்றமை அண்மைய நாட்களாக அதிகரித்து காணப்படுகின்றது.

இதனால் அவ்வீதி வழியாக போக்குவரத்து செய்கின்ற பயணிகள், வாகன சாரதிகள் எனப் பலரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதுடன். அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22