தனது பிராந்தியத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு சொந்தமான கப்பலை இந்த வாரம் தடுத்து வைத்துள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட் கடலோர காவல்படை இரண்டு ஈரானிய மீனவர்களைக் கொன்றதாகக் கூறப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு குறித்த கப்பலானது ஈரான் கடற் பிராந்தியத்தில் நுழைந்துள்ளது.

இந் நிலையிலேயே இந்த கப்பல் ஈரானிய கடலோர காவல்படையினர் கடந்த திங்கட்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளதாக ஈரான் வெளிவிவகார அமைச்சகம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.

இதனிடையே அரசு நடத்தும் தொலைக்காட்சி ஒரு அமைச்சக அறிக்கையை மேற்கோளிட்டு,

திங்கட்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கப்பல் ஈரானின் எல்லைக் காவலர்களால் கைப்பற்றப்பட்டதுடன், அதன் குழுவினர் நம் நாட்டின் கடலில் சட்டவிரோத போக்குவரத்தில் ஈடுபட்டமைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

அதே நாளில், ஐக்கிய அரபு எமிரேட் காவலர்கள் இரண்டு ஈரானிய மீனவர்களை சுட்டுக் கொன்றனர் மற்றும் ஒரு படகையும் கைப்பற்றினர்.

இந்த சம்பவத்திற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளதுடன் புதன்கிழமை ஒரு கடிதத்தில் இழப்பீடு வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.

பாரசீக / அரேபிய வளைகுடா முழுவதும் ஒவ்வொரு நாடுகளுக்கிடையிலான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.