வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள நாமல் ராஜபக்ஷவை பார்வையிடுவதற்காக சிராந்தி ராஜபக்ஷ மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இன்று (12) காலை சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.

நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாமலை பார்வையிட்ட நிலையில் இன்று சிராந்தி உட்பட ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிறைச்சாலைக்கு படையெடுத்துள்ளனர்.

70 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பில் நேற்று (11) நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ஷவை  ஜுலை 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.