மொறட்டுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவன் கட்டுபெத்தை பிரதேசத்தில் உள்ள விடுதியில் இருந்து இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளான். 

நேற்று இரவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்துள்ளனர். 

திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய மாணவனே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளான்.

தற்போது சடலம் பாணந்துரை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மொறட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.