தனது வீட்டை மீள் திருத்தலுக்கு கருங்கற்களை எடுத்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் மீது கற்பாறை சரிந்து விழுந்ததில் குறித்த பெண் படுங்காயமுற்று அவர் உடபுசல்லாவை அரசினர் வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

உடபுசல்லாவைப் பகுதியைச் சேர்ந்த மஸ்பென்ன கிராமத்தில் வசித்து வந்த டபள்யு.டி.பேபி நோனா என்ற 56 வயதான மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு  கற்பாறையில் நசுங்கி மரணித்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த குறித்த பெண்ணின் சடலம் சட்ட வைத்திய பிரேத பரிசோதனைக்காக, உடபுசல்லாவை அரசினர் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

ஊவா – பரணகமைப் பொலிசார் இச் சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.