புதிய அரசாங்கத்திடம் மஸ்கெலியா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

Published By: Digital Desk 4

20 Aug, 2020 | 05:28 PM
image

இலங்கையில் 2020 ஆம் ஒகஸ்ட்  05ம் நடைபெற்று முடிந்த தேர்தல் மூலம் தெரிவான அராங்கமானது அதிகளவிலான வைத்தியர்களை நியமித்துள்ளமை சிறப்பான விடயமாகும்.

இதன்படி 1969 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையானது நவீன வடிவமைப்பில் பாரிய இடவசதியுடன் கட்டப்பட்ட வைத்தியசாலையாக விளங்குகின்றது.

அந்த வகையில் இவ்வைத்தியசாலையில் சுமார் 167 கட்டில்கள் கொண்ட விசாலமான இடவசதியும் காணப்படுகின்ற போதிலும் இங்கு நோயாளர்களுக்கான சிகிச்சை அளிக்கும் வீதமானது மிகவும் குறைவாகவே காணப்படுவது வருந்தத்தக்க விடயமாகும். போதியளவிலான வைத்தியர்களை ஏற்படுத்தி தருவதனூடாக இந்நிலையை மாற்றியமைக்க கூடியதாக இருக்கும்.

இதன்படி மகப்பேற்று வைத்தியர் ஒரு நாளும், விசேட வைத்தியர் ஒரு நாளும், சத்திரசிகிச்சை வைத்தியர் ஒருநாளும், பொது வைத்திய நிபுணர் ஒருநாளும், கண், காது விசேட வைத்தியர் ஒருநாளைக்கும் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையில் வாரத்திற்கு ஒருமுறை நியமிக்கபடுவார்களானால், இங்கு வசிக்கும் 100,000 ற்கும் மேற்பட்ட மக்கள் தமது நோய்களுக்கான தீர்வை பெற்று சுகாதாரத்தினை பேண கூடியதாக இருக்கும்.

மேலும், சிவனொளிபாதமலையில் பருவகாலத்தில் தரிசிக்க செல்வோருக்கும் இந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள கூடியதாக இருப்பதனுடன் போதுமான அளவு இடவசதிகள் காணப்பட்ட போதிலும் கருவிகள் பல இல்லாமையின் காரணமாக இவ்வைத்தியசாலையில் மகப்பேறு இடம்பெறுவதும் முற்றாக இல்லாது போயுள்ளதுடன் அதற்காக ஒதுக்கப்பட்ட அறைகள் வெறுமையாக காட்சியளிப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது.

எனினும், ஆரம்ப கட்டத்தில் அதிகளவிலான மகப்பேறுகள் இடம்பெற்றமை குறிப்பிடதக்க விடயமாகும். 

எனவே,அரசானது இதனை கவனத்தில் எடுத்து தேவையான கருவிளை வழங்குவதன் ஊடாக வைத்திய சேவைகளை தடையின்றி வழங்க உதவ வேண்டும் என பொதுமக்கள் கோருகின்றனர். எனவே, தற்போது கடமைகளை ஏற்றுள்ள புதிய சுகாதார அமைச்சானது இவற்றை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38