(செ.தேன்மொழி)

அளுத்கம பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் கடமைநேர துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டமையினால் பொலிஸ் நிலையத்திற்குள் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அளுத்கம பொலிஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் பொலிஸ் கான்ஸ்டேபிள் ஒருவர் தனது கடமைநேர துப்பாக்கியை பரிசிலீத்துக் கொண்டிருந்த போது , திடீரென துப்பாக்கி இயங்கியமையின் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

பிடியாணை விவகாரம் தொடர்பில் அளுத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த  தனது தந்தையை பார்வையிடுவதற்காக சென்றிருந்த இராணுவ சிப்பாய் ஒருவரே இதன்போது காயமடைந்துள்ளதுடன் , அவர் சிகிச்சைச்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.