பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் சாரதி துசித குமாரவுக்கும் முன்னாள் வெலிகட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு கொழும்பு மேல் மேல் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.

அத்துடன் இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், இருவருக்கு வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு கொழும்பின் புறநகர் ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து ஒன்றின்போது முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க செலுத்தி சென்ற வாகனம் தொடர்புபட்டிருந்ததாக குற்றச்சாட்டில் துசித குமார கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அவரைத் தொடர்ந்து தனது அதிகாரத்தை பயன்படுத்தி சாரதியை மாற்றி, உண்மையை மறைத்து சாட்சியங்களை சோடித்து  நீதித் துறைக்கு மோசடி செய்தமை தொடர்பிலான குற்றச்சாட்டில் முன்னாள் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடலவைக் கைதுசெய்ய சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.