முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் இராணுவப் பாதுகாப்பை விஷேட அதிரடிப் படையினரால் மாற்றப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டிருந்த 50 இராணுவ வீரர்களில் 25 பேரை விலக்கிக் கொண்டு, பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் 25 பேர் நியமிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்

இன்று காலை முதல் அமுலாகும் விதமாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

தனது உயிரிற்கு ஆபத்துள்ளதால் தனது இராணுவப் பாதுகாப்பு படையினரை அகற்றவேண்டாமென பாதுகாப்பு செயலாளருக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.