(இராஜதுரை ஹஷான்)

நல்லாட்சி அரசாங்கத்தில் இடம் பெற்றதாக குறிப்பிடப்படும் ஊழல் மோசடிகள்  தொடர்பில் முன்னெடுக்கப்படும்    சுயாதீன  விசாரணைகளில் எவ்வித அரசியல் தலையீடுகளும்   இடம்பெறாது.  விசாரணைகளை முன்னெடுக்கும் நிறுவனங்களுக்கு  முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. என    ஊடகத்துறை அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

 

அரசாங்கத்தின் முதவாவது அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து  இடம் பெற்ற அமைச்சரவை   தீர்மானங்கள் தொடர்பில் அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில்  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நல்லாட்சி  அரசாங்கத்தில் இடம் பெற்றதாக குறிப்பிடபப்படும்   மத்திய வங்கியின் பினைமுறி மோசடி  உட்பட    அரச நிதி  மோசடி குறித்து  இடம்  பெறும்     விசாரணைகளில்    அரசாங்கம் தலையிடாது.   சுயாதீனமான   முறையில்  விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து  இடம் பெறும்.

 

சுயாதீனமான முறையில்  சட்டமாதிபர்  திணைக்களம்,   நீதிமன்றம் மற்றும்   அதுசார்  தாபனங்கள்  செயற்படுவதற்கான சூழலை     உறுதிப்படுத்துவோம்.அரசியல்    பழிவாங்களை    இலக்காகக் கொண்டு    எதிர் தரப்பினரை       வதைப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல.  கடந்த அரசாங்கம் செய்த தவறுகளினாலே அவர்கள் மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்பட்டார்கள்.

 

அரசியலமைப்பின் 19வது திருத்ததை இரத்து செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள  சாதக அம்சங்களை ஒன்றினைத்து   20வது திருத்தத்தை   உருவாக்குவதற்கான    ஆரம்பக்கட்ட நடவடிக்கைக முன்னெடுக்கப்பட்டுள்ளது.   .  நாட்டுக்கு பொருந்தும் வகையில் புதிய  அரசியலமைப்பினை உருவாக்குவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என்றார்.