இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரை தேசிய விளையாட்டு சபையில் உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சங்கக்கார மற்றும் ஜயவர்தன ஆகியோருடன் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அண்மையில் மேற்கொண்ட கலந்துரையாடலின்போதே தேசிய விளையாட்டு சபையில் இணையுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் கீழ் இவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய விளையாட்டு சபை உறுப்பினர்களாக உள்வாங்கப்படுவார்கள்.

இவர்கள் இருவருக்கும் நாட்டில் விளையாட்டுக்களை மேம்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதே அவர்களின் பிரதான பணியாக இருக்கும்.

தேசிய விளையாட்டுக் குழுவின் புதிய உறுப்பினர்கள் விபரத்தை விரைவில் வெளியிடுவதற்கும் விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.