(நா.தனுஜா)

சுதந்திரத்தின் பின்னரான இலங்கையின் ஜனநாயகத்திற்கு இறுதிச்சடங்குகளை நடத்திய பாராளுமன்றமாக இந்த 16 ஆவது பாராளுமன்றம் வரலாற்றில் இடம்பெறப்போகிறதா? என்று சந்தேகம் வெளியிட்டிருக்கும் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, நாட்டின் ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் நீதி என்பவற்றைப் பாதுகாப்பதற்காகக் குரல்கொடுக்கக்கூடிய உறுதிப்பாடு எதிர்க்கட்சியிடம் இருக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

பொதுத்தேர்தலையடுத்துத் தெரிவான புதிய பாராளுமன்றம் முதலாவதாக இன்று  வியாழக்கிழமை சம்பிரதாய நிகழ்வுகளுடன் கூடியது.

இவ்வாறானதொரு பின்னணியில் புதிய பாராளுமன்றத்தின் மீதான தனது நிலைப்பாடு தொடர்பில் டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் மங்கள சமரவீர, அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:

இன்றைய தினம் கூடியிருக்கும் 16 ஆவது பாராளுமன்றம் சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில் ஜனநாயகத்திற்கான இறுதிச்சடங்குகளை நடத்திமுடித்த ஒரு பாராளுமன்றமாக வரலாற்றில் இடம்பெறுமா? என்று குரல் எழுப்பி உள்ளத்துடன் எதிர்க்கட்சி நாட்டின் ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றைப் பாதுகாப்பதற்குத் தொடர்ந்தும் போராடக்கூடிய உறுதியான எதிர்கட்சியாக இருக்கும் என்று  தாம் எதிர்பார்ப்பதுடன் அதற்காக பிரார்த்திப்பதாகவும்  தெரிவித்திருக்கிறார்.