கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் தர்மக்கேணி கிராமத்தில்  வயல் விதைப்பு செய்வதற்காக காணி துப்புரவு பணியில் ஈடுபட்டபோது காணி உரிமையாளரால் சில வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் காணி உரிமையாளரால் பளை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் வெடிபொருட்களை மீட்பதற்கான  நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகின்றனர்.